அர்ஜென்டினா. கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் மூலம் பிரனான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்து உலககோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலககோப்பைதான் தனது கடைசி உலககோப்பை என்று அணியின் கேப்டன் மெஸ்ஸி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் கோப்பையோடும், மகிழ்ச்சியான நினைவுகளோடும் கால்பந்து போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் மாடர்ன் ஃபுட்பால் ஜாம்பவான் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில், தான் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதில்லை என்றும், சாம்பியன் என்ற பெருமையுடன் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறி தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் மெஸ்ஸி.