in

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி‎: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

மலேசியாவின் குவண்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டிக்கு இரு நாட்டு ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பர்தீப் மோர் கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெற செய்தார்.இதன்பின்னர் ரிஸ்வான், இர்பான் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து பாகிஸ்தான் அணியை முன்னிலை பெற செய்தனர்.

பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்ததால் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது.இதனையடுத்து கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார்.இரு அணி வீரர்களும் தொடர்ந்து ஆட்டத்தில் முன்னிலை பெறும் முனைப்புடன் ஆக்ரோஷமாக விளையாடினர்.சற்று நேரத்திலேயே ரமன்தீப் கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெற செய்தார்.

பாகிஸ்தானின் கோல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்போட்டியின் முடிவில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை மறுதினம் நடைபெறும் போட்டியில் சீன அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

சினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை… நடிகை ரம்பா ஜீவனாம்சம் கேட்டு வழக்கு

பிளாக்பெர்ரி டிடெக் 60 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு