in

இந்திய கபடி அணிக்கு குவியும் பாராட்டு… தலைவர்கள் புகழாரம்

உலகக் கோப்பை கபடியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஈரான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பு நிறைந்து காணப்பட்ட ஆட்டத்தில் இந்திய அணி 39 – 28 என்ற புள்ளிகள் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு தலைவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், வாகை சூடிய இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரையும் வாழ்த்துவதாகக் கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், இந்திய அணி அசாத்திய திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி மீண்டும் ஒருமுறை சாதித்துக் காட்டியிருப்பதாகத் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த வெற்றியின் மூலம் கபடியின் பிறப்பிடம் இந்தியா தான் என்பதை வீரர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காண்பித்துள்ளதாக சோனியா பாராட்டியுள்ளார்.

இதேபோல், விளையாட்டு நட்சத்திரங்கள் விஜேந்தர் சிங், வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, மனோஜ் திவாரி, ஹர்பஜன் சாங், ஷிகர் தவான், கவுதம் கம்பிர் உள்ளிட்டோரும் இந்திய கபடி அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

‘புரியாத புதிர்’- ஆக மாறிய விஜய்சேதுபதியின் மெல்லிசை

தீபாவளி வெளியீடு..உற்சாகத்தில் நடிகர் ஷாம்