in

உரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வெற்றியை சமர்ப்பித்த கபடி அணி

உலக கோப்பை கபடிப் போட்டி வெற்றியை, உரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக இந்திய கபடி அணி கேப்டன் அனுப் குமார் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, வலிமையான ஈரான் அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே விறுவிறுப்பு நிறைந்து காணப்பட்ட ஆட்டத்தின் முதல் பாதியில் ஈரான் 5 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது. நெருக்கடியான நிலையில் இரண்டாவது பாதியில் களமிறங்கிய இந்திய அணி, அதனை திறம்படச் சமாளித்து துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அஜய் தாக்கூர் அற்புதமாக விளையாடி 12 புள்ளிகளைக் குவித்தார். இறுதியில் இந்திய அணி 39 – 28 என்ற புள்ளிகள் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றியை வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வெற்றியை உரி தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக அணியின் கேப்டன் அனுப் குமார் கூறினார். மேலும், அழுத்தத்திற்கு ஆளாகாமல் விளையாடியதனால் வெற்றி வசமானதாகவும் அவர் தெரிவித்தார்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

அமெரிக்க எழுத்தாளர்‌ பால் பீட்டிக்கி ‘மேன் புக்கர்’ பரிசு அறிவிப்பு

‘புரியாத புதிர்’- ஆக மாறிய விஜய்சேதுபதியின் மெல்லிசை