in

ஒருநாள் மழைக்கே தாங்காத பள்ளி..சுற்றுச்சுவர் இடிந்ததால் விடுமுறை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியதால், விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அப்பள்ளியின் சுற்றுச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளைத் தவிர பிற வகுப்பு மாணவிகளுக்கு விடுமுறை அளிப்பதாகக் கூறியுள்ளார். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது தற்காலிகத் தீர்வாக இருந்தாலும், தங்களின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், பள்ளியை சீர் செய்து தர வேண்டும் என மாணவிகள் கேட்டுக்கொண்டனர்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0
tamil cinema news

டார்ஜான் பாணியில் ஆர்யா மிரட்டும் கடம்பன் டீசர் வெளியீடு

tamil daily news

இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம்.,யில் தங்கம்!