in

சென்னை-28 இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீடு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகராகத் தடுமாறிக் கொண்டிருந்த வெங்கட்பிரபுவுக்கு அடையாளம் கொடுத்த படம் சென்னை 28. கல்லி கிரிக்கெட் எனப்படும் தெருவோர கிரிக்கெட்டை மையமாக வைத்து நட்பு, காதல், துரோகம் என கலவையாக வந்த இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகன் தலயில் வைத்து கொண்டாடினான். இதையடுத்து அஜித்தை வைத்து மங்காத்தா என சில படங்கள் வெங்கட் பிரபுவுக்கு நல்ல பெயரைக் கொடுத்தாலும், கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்தநிலையில் சென்னை-28 கூட்டணியுடன் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்ட வெங்கட் பிரபு, படப்பிடிப்பையும் முடித்து விட்டார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். இந்தநிலையில் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகம் நவம்பர் 28-ல் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மூலம் பாடலாசிரியர் அவதாரமும் வெங்கட் பிரபு எடுத்துள்ளார்.முதல் பாகத்தில் பெரிதாக பேசப்பட்ட யுவனின் இசை, பிரேம்ஜி, சிவா, ஜெய் கூட்டணியின் காமெடியும் இரண்டாம் பாகத்திலும் பேசப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முதல் இன்னிங்க்ஸில் இரட்டைச் சதமடித்த வெங்கட்பிரபு, இரண்டாவது இன்னிங்ஸில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

இந்திய தூதரக ஊழியருக்கு 48 மணி நேர கெடு விதித்த பாகிஸ்தான்

tamil cinema news

விஜய்யின் ‘பைரவா’ டீசர் வெளியீடு