தனது பிறந்தநாளில் 60,000 ஆயிரம் கோடிகளை நன்கொடையாக அளிக்கும் அதானி.
அதானி குழமத்தின் தலைவர் களதம் அதானி. இன்று அவரது 60 வது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி, திறன் மேம்பாடு மற்றும் மருத்துவம் தொடர்பான உதவிகளை செய்ய 60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மும்பைக்கு தனது 17 வயதில் வைர வியாபாரத்தில் இடைத்தரகராக வந்தவர். 20 வயதில் லட்சாதிபதியாக உயர்ந்து நின்றவர். 26 வது வயதை கடந்த போது அதாவது 1988 ஆம் ஆண்டு ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்ய அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் தொடங்கினார். இன்று பங்குச்சந்தையிலும் முன்னனியில் உள்ளார்.

2020-ம் ஆண்டு கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 8.9 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே 2022-ம் ஆண்டு மே மாதம் 105.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் மதிப்பு 2022, பிப்ரவரி மாதத்தின் படி 40 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. சென்ற 3 ஆண்டுகளில் அதன் மதிப்பு 5,500 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதான் போர்ட்ஸ் கிழக்கு மற்று மேற்கு இந்தியாவின் 13 முக்கிய சிறு துறைமுகங்களை இயக்கும் நிறுவனமாக உருவாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரி வர்த்தகம் மற்றும் நிலக்கரி ஒப்பந்ததாரராக அதானி எண்டர்பிரைசஸ் உள்ளது. ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தின் ஒப்பந்தம் அதானி எண்டர்பிரசஸிடம் உள்ளது. மேலும் 8 விமான நிலையங்களை இயக்கும் ஒப்பந்தத்தையும் அதானி எண்டர்பிரைசஸ் பெற்றுள்ளது.
மும்பை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அதானி கேஸ் நிறுவனம் தன் பங்களிப்பை தந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய அனல் மின் சக்தி உற்பத்தி நிறுவனமாக அதானி பவர் உள்ளது. அதற்கு பக்கபலமாக அதானி எண்டர்பிரைசசின் நிலக்கரி வர்த்தகம் உள்ளது.
இந்தியாவின் பெரிய சமையல் எண்ணெய் நிறுவனமாக அதானி வில்மர் காணப்படுகிறது. அதைபோல அதானி சிமென்ட் மற்றும் அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் (AHVL), மருத்துவம் மற்றும் நோயறிதல் வசதிகளை அமைத்தல் உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான வணிகத்தை மேற்கொள்கிறது.
இப்படி அனைத்திலும் அதானி குழுமம் தன் வணிகத்தை ஈடுப்படுத்தி உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அதானி தனது 60 வது பிறந்தநாளான இன்று 60 ஆயிரம் கோடி நன்கொடை அளித்துள்ளார்.
இந்த நன்கொடைத் தொகையை அதானி ஃபவுண்டேஷன் நிர்வகிக்கும் எனவும், மருத்துவம், கல்வி, திறன் பயிற்சி போன்றவற்றுக்கான நன்கொடைத் தொகை பயன்படுத்தப்படும் எனவும் கவுதம் அதானி Bloomberg ஊடகத்திடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.
இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் இதுவொரு மிகப்பெரிய நன்கொடைத் தொகை எனவும் அதானி தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் பிரபல முதலீட்டாளருமான வாரன் பஃபெட் ஆகியோர் பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.