in

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளரை கலாய்த்த மு.க.அழகிரி மகன்..

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளரான சரவணனை விமர்சித்து மு.க.அழகிரியின் மகன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் டாக்டர் சரவணன் திமுக சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை விமர்சித்து திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிட சரவணனை தவிர வேறு சிறந்த ஆட்களே இல்லையா ?.. ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்கிற ஹேஸ்டேக்கும் அந்த டுவிட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், திமுக தலைவர் கருணாநிதி பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தி.மு.க.வில் தற்போது அழகிரி இல்லை என்றும், தன்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

திமுக-வில் இருந்து தொடர்ச்சியாக மு.க.அழகிரி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மு.க.அழகிரியின் மகன் திமுக வேட்பாளர் தேர்வை விமர்சித்து டுவிட்டுரில் பதிவிட்டுள்ளார்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0
india today news

பீகார் துணை முதலமைச்சருக்கு வாட்ஸ்-அப்பில் வந்த 44,000 காதல் அழைப்புகள்..!

tamil daily news

உதய் மின் திட்டத்தில் இணைகிறது தமிழக அரசு: பியூஷ் கோயல்