in

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘எஸ் 3’ மோஷன் போஸ்டர்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ் 3 படத்தின் மோஷன் போஸ்டர் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், டீசர் வெளியாகும் தேதியும் தீபாவளியன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் எஸ் 3 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு
என இரு மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக, டிசம்பர் 16-ல் எஸ் 3 படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0
Tamil Daily News

மொகாலியில் இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

சினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை… நடிகை ரம்பா ஜீவனாம்சம் கேட்டு வழக்கு