நீட் (NEET) 2022: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்க ஏப்ரல் 6 ம் தேதி தொடங்கியது. மே மாதம் 6 தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
National Eligibility Cum Entrance Test (UG) – 2022: நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் முடிவடைய இருப்பதால், தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் தேர்வர்கள் சிலர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்டு கேரிக்கை வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற தேர்வு முகமை விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து 15.5.2022 இரவு 9.00 மணி வரை விண்ணப்பிக்கவும் விண்ணப்ப கட்டணம் செலுத்த இரவு 11.50 வரைக்கும் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 17 ம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள அனைவரும் விரைந்து கால நீட்டிப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
இதற்கிடையில் இத்தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணைய தளம் மூல்ம் இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலிருந்தும் அதிகமாக விண்ணப்பித்துள்ள மாணவர்களில் மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேத்திலிருந்து அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 11 லட்சம் விண்ணப்பத்தில் 1.52 லட்சம் பேர் மகாராஷ்டிராவை சார்ந்தவர்கள். 1.21 லட்சம் பேர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை 84,214 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வினை எதிர்த்து பல போராட்டங்களும் அரசு நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்து ஆளுநர் அவர்களுக்கு கடிதம் எழுதி வருவதும் குறிப்பிட தக்கது.