in

பாக்., மக்களையும் காப்பாற்றியவர்கள் இந்திய ராணுவத்தினர்: மோடி பு‌கழாரம்

இந்திய ராணுவத்தினர் தம‌து நாட்டு மக்களை மட்டுமல்லாமல் பாகிஸ்தான் மக்களையும் காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போர் வீரர்கள் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். அப்போது பேசிய மோடி, வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாள் நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த கிடைத்த வாய்ப்பு. ராணுவ வீரர்களின் வீரம் குறித்து மட்டுமே நாம் பேசுகிறோம். அவர்கள் மனிதாபிமானத்தின் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள்.

ஸ்ரீ நகரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட ராணுவத்தின் பணி மகத்தானது. நமது ராணுவம் எப்போது வேறுபாடு காட்டியதில்லை. அமைதி நடவடிக்கையில் ராணுவத்தின் பங்கு சிறப்பானது. ஐ.நா அமைதி பாதுகாப்பு படைகளில் இந்தியா பெரிய பங்களிப்பை செலுத்தி வருகிறது. ஏமனில் கிளர்ச்சியாள‌ர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையின் போது அங்கு தவித்த இந்திய மக்கள் மட்டும்மல்லாது பாகிஸ்தான் மக்களையும் நம் ராணுவம் மீட்டது என்றார்.

மேலும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ’ஒரே பதவி ஒரே ஊதியம்’ திட்டத்திற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0
Jayalalitha, Chief Minister Jayalalitha, Amma, Chief Minister of Tamil Nadu, Speech of Jayalalitha, Speech of Chief Minister of TamilNadu, Chief Minister

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற மண் சோறு சாப்பிடும் அதிமுக மகளிர் அணியினர்

சொந்தங்களுக்கு அரசு பணி கொடுத்ததாக புகார்: கேரளாவில் அமைச்சர் ராஜினாமா