பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ்ல் வானில் அந்தரத்தில் அமைக்கப்ட்டுள்ள உணவகம்

0
12

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் வானில் அந்தரத்தில் அமைக்கப்ட்டுள்ள உணவகம்.

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் வானத்தின் 50 அடி உயரத்தில் அதாவது அந்தரத்தில் அமர்நதபடி உணவு அருந்தும் உணவகம் (Dinner in the sky) செயல்பட்டு வருகிறது.  உலகின் பல பகுதிகளில் இதன் கிளை உணவகங்கள் செயல்படுகின்றன. அந்த வகையான உணவகத்தில் அமர்ந்து உணவு உட்கொள்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என அந்த அனுபவத்தை ஓருவர் கூறினார்.

இந்த உணவகம் 2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. வானத்தில் 50 அடி உயரத்தில் கிரேன் மூலம் நிறுத்தியுள்ளனர் 9 டன் எடைக் கொண்டது இதில் உணவு உண்ண முதலில் புக்கிங் செய்து பின் உணவு உண்ண அனுமதிக்கப்படுவர். கைதேர்ந்த சமையல் வல்லுநர்களைக் கொண்டு உணவு செய்வதுடன் அதை சிறப்பாக பரிமாறுகின்றனர். இதில் மொத்தம் 32 விருந்தினர்கள் அமர்ந்து உண்ணலாம்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ்ல் வானில் அந்தரத்தில் அமைக்கப்ட்டுள்ள உணவகம்
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ்ல் வானில் அந்தரத்தில் அமைக்கப்ட்டுள்ள உணவகம்

வட்ட வடிவில் சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு, அந்நகரில் உள்ள மிக உயர்ந்த கட்டிடமான “பர்க் டியு சின்குவண்டெனெய்ர்” கட்டிடத்தின் உச்சியில் இருந்து கிரேன்களின் உதவியால் அந்தரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆபத்தானதாக இருந்தாலும் உரிய பாதுகாப்புடன் இவ்வுணவகம் செயல்பட்டு வருகிறது. ஓவ்வொருக்கும் தனி இருக்கைகளுடன் கூடிய பெல்ட் இணைக்கப்பட்டு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

டின்னர் இன் த ஸ்கை‘ உணவகத்தில் புதுவகையான அனுபவத்தை தருகிறது அந்நாட்டு மக்களுக்கு அந்தரத்தில் பறந்தப்படி தாம் ஆர்டர் செய்த உணவினை உண்பதும் பிரஸ்சல்ஸி நகரின் அழகை ரசித்தப்படி உணவு உண்பதும் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here