in

மொகாலியில் இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலா‌ன மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை ஆடிவருகிறது. இதில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியும், டெல்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மொகாலியில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி இந்த மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மொஹாலியில் விளையாடவிருப்பது இதுவே முதல் முறை.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

தீபாவளி வெளியீடு..உற்சாகத்தில் நடிகர் ஷாம்

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘எஸ் 3’ மோஷன் போஸ்டர்