in

ஸ்மார்ட்போன் நீரில் விழுந்து பாதிப்படைந்தால் தீர்வு காண சில ஸ்மார்ட் டிப்ஸ்

ஸ்மார்ட்போன் தற்போது இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. நாம் விளையாட, கால்குலேட்டர் பயன்படுத்த, இசை கேட்க, இணையதள சேவை போன்ற பல பயன்பாடுகளுக்கும் நம் ஸ்மார்ட்போன் முக்கியமான ஒன்றாக உள்ளது.

தற்போது வாட்டர் ப்ரூப் போன்ற பல மாடல் போன்கள் வெளிவந்தபோதிலும் பல போன்கள் தண்ணீரால் சேதம் அடைகிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து பாதிப்பிற்குள்ளானால் அது நமக்கு எவ்வளவு பெரிய இழப்பு..? அப்படி ஸ்மார்ட்போன் நீரில் விழுந்து பாதிப்படைந்தால் தீர்வு காண சில ஸ்மார்ட் டிப்ஸ்..!

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து சேதம் அடைந்தால் செல்போனில் உள்ள பல தொழில்நுட்ப செயல்பாடுகள் இயங்காமல் பாதிப்படைகிறது. அதிர்ஷ்டவசமாக, சில ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தாலும் சேதம் அடையாமல் இருக்கவும், தண்ணீரால் சேதம் அடைந்தால் அதை தெரிவிக்கவும் தற்போது வெளிவந்துள்ள ஐ போன்களில் சில குறிகாட்டிகளை (indicator) தொழிநுட்பம் கொண்டு வடிவமைத்துள்ளனர்.

ஒருவேளை உங்களுடைய ஐபோன் 3G மாடல் போனாக இருந்தால் ஹெட்போன் ஜாக்கில் இந்த குறிகாட்டிகள் (indicator) பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 5 மாடல் போன்களில் இந்த குறிகாட்டிகள் நானோ சிம் கார்டுகள் பொருத்தும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் தண்ணீரில் விழுந்து பாதிப்படைந்தால் அந்த குறிகாட்டிகளில் பிங்க் அல்லது சிவப்பு நிறத்தில் குறியீடு காட்டும். சில சமயங்களில் அது வெள்ளை நிறத்தில் கூட எறியலாம். அப்படி குறீயீடுகள் தெரிந்த பின் உடனடியாக நம் நம்முடைய போனில் உள்ள பேட்டரியை கழற்றி உலர செய்தல் வேண்டும்.

மொபைல் போர்ட் மற்றும் ஜாக் உள்ள இடங்களில் ஈரப்பதம் இல்லாமல் உலர விட வேண்டும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் போன்ற அனைத்தையும் முற்றிலும் கழற்றி ஈரத்தை உலர்த்த வேண்டும். இதற்காக ட்ரையர் பயன்படுத்துதல் தவறானது. எனவே ட்ரையர் மூலம் ஈரத்தை உலர்த்த கூடாது. ஏனெனில் ட்ரையர் மொபைல் போனின் சில பகுதிகளைப் பாதிக்கலாம்.

தண்ணீரில் விழுந்து பாதிப்படைந்த உடன் மொபைல் போனை சார்ஜ் போடவோ அல்லது சுவிட்ச் ஆன் பண்ணவோ கூடாது. போனில் உள்ள பேட்டரியை கழற்றி மற்றொரு போனில் அதனை இயக்க செய்தல் அவசியம். அப்போது தான் பேட்டரி பழுதடைந்ததா? என்பதை அறிய முடியும். ஒரு வேளை பேட்டரியில் பாதிப்பு என்றால் பேட்டரியை மாற்றிவிட்டு நம் போனை எளிதாக உபயோகிக்கலாம்.

சில வகை பிரத்யேக சாம்சங் மொபைல் போன்களில் பேட்டரியில் இத்தகைய குறிகாட்டிகள் பொருத்தப்பட்டுள்ளது. போன் பாதிப்படைந்தால் அந்த பேட்டரியிலே குறியீடுகள் காட்டப்படுகிறது. அதன் மூலம் அந்த பேட்டரி பாதிப்படைந்துள்ளது என்பதை அறியலாம்.

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0
india today news

அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி…. பாக்., வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு

உலகக்கோப்பை கபடி: இறுதி போட்டியில் இந்தியா – ஈரான் பலப்பரீட்சை