2022 ல் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த டாப் 5 கன்னட திரைப்படங்கள்

0
8

கன்னட திரையுலகம்:  கன்னட திரையுலகம் இந்தாண்டு மிகவும் குஷியாக உள்ளது. இந்தாண்டு கன்னடத்தில் வெளியான 5 படங்கள் 100 கோடி வசூல் சாதனை செய்து ரசிகர்களையும், திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கன்னட திரைப்படங்கள் குறைவான பட்ஜெட்டில்தான் உருவாக்கப்படும். பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில் இருந்த கன்னட திரையுலகம் கேஜிஎஃப் படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கோலார் தங்க வயலில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக உருவான கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் கன்னடத்தில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளின் இரசிகர்களும் கொண்டாடும் படமாக அமைந்தது. இப்படம் உலக அளவில் 250 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை இரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த ஏப்ரல் மாதம் பான் இந்தியா படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

கேஜிஎஃப்யை தொடர்ந்து கன்னடத்தின் வேறு சில படங்களும் பான் இந்தியா படமாக வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. அது குறித்து காணலாம்.

1.கேஜிஎஃப் சாப்டர்2 (ஏப்ரல் 2022)

யாஷ், கீர்த்தி ஷெட்டி, ரவீணா தாண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள நடித்து  100 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலக அளவில் 1250 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த படம் கேஜிஎஃப் சாப்டர்2. கன்னட திரையுலகில் ஒரு படம் இவ்வளவு வசூல் செய்தது இதுவே முதல் முறை.

2.விக்ராந்த் ரோணா (ஜீலை 2022)

இப்படமும் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி பான் இந்தியா படமாக கடந்த ஜீலை மாதம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னான்டஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படமும் சுமார் 210 கோடி வசூல் செய்து கேஜிஎஃப்1 மற்றும் 2ம் பாகத்தை தொடரந்து 3 வது இடத்தை பிடித்துள்ளது.

3.ஜேம்ஸ்(மார்ச் 2022)

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் 70 கோடி பட்ஜெட்டில் ஆக்ஷ்ன் திரில்லராக உருவான படம் ஜேம்ஸ். இப்படம் 151 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

4.காந்தாரா (செப்டம்பர் 2022)

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இப்படம் பாலிவுட்டிலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 142 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள இப்படத்தின் வரவேற்பு அதிகரித்துள்ளதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5.777 சார்லி (ஜீன் 2022)

20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 105 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ரஷித் ஷெட்டி நடிப்பில், கிரண்ராஜ் இயக்கத்தில் கடந்த ஜீன் மாதம் இப்படம் வெளியானது.

top 5 movies in kannada cinemas

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here