சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக 12 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்

0
16

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு முதல் ஜனவரி 19ம் தேதி வரை நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு தரிசனத்திற்காக இதுவரை 12 லட்சத்து 42 ஆயிரத்து 302 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி முதல் தேதியில் இருந்து 19ம் தேதி வரை 17.10 லட்சம் பக்தர்களுக்கு ‘வெர்ச்சுவல் கியூ’ மூலம் தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவஸம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.

அதிகபட்சமாக ஜனவரி 4ம் தேதி 89,969 பேரும் குறைந்தபட்சமாக ஜனவரி 19ம் தேதி 9,136 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 1 முதல் 8ம் தேதி வரையும், பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 13,14 தேதிகளிலும் தினசரி 89 ஆயிரத்துக்கும் அதிகமானாேர் முன்பதிவு செய்துள்ளனர்.

sabarimalai temple open at magaravilakku pooja from january 1 to 19

ஜனவரி 15ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை தினசரி 34 ஆயிரத்துக்கும் கீழ் முன்பதிவு நடந்துள்ளது. ஜனவரி 10,11,12 தேதிகளில் முறையே 55,35,40 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் இனியும் 4,67,698 பேர் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல பூஜை காலமான கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரையிலான 41 நாட்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து முடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here