விஜயின் பீஸ்ட் பட பாடலான அரபி குத்து 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
கொரோனா தாக்கங்கள் குறைந்து காணப்பட்ட போது வெளியான படங்கள் வரிசையில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட படமும் ஓன்று இயக்குனர் நெல்சன் தீலிப் குமாரும் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் விஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவில் வெளாயாகியது.
பீஸ்ட திரைப்படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தோல்வியடையாமல் ஓடியது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் இப்படம் 250 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தின் செலவே 150 கோடி எனவும் பேசப்படுகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் அரபி குத்து பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது. நடிகர் விஜயின் துல்லலான டேன்ஸ் காட்சிகள் என அருமையாக இருந்தது. இன்றும் குழந்தைகள் இப்பாடலை விரும்பி கேட்டு ஆடி வருவது நாம் அறிந்ததே.
அரபி குத்து பாடலை எழுதியவர் நடிகர் சிவகார்த்திகேயன் இப்பாடல் யூடீயூபில் புதுப்புது சாதனைகளைப் படைத்து வருகிறது. முதலில் 100 மில்லியன் வீவர்சைப் பெற்றது. தற்போது அதையும் தாண்டி 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புது சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நடிகர் விஜயின் அடுத்த படத்தை வம்சி இயக்கி அதற்கான காட்சிகள் விருவிருப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்தே அப்படத்திற்கு பெயர் வாரிசு எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையிலும் அடுத்த படத்திற்கான அப்டேட் வந்தும் பீஸ்ட பட பாடல் புதிய சாதனை புரிந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.