18 குழந்தைகள் பலியானதற்கு இந்திய இருமல் மருந்தே காரணம் என உஸ்பெகிஸ்தான் நாடு அறிவித்துள்ளது. இது இரண்டாவது முறை என்றும் இந்திய மருந்துகள் துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகைள பயன்படுத்திய குழந்தைகள் 18 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது உஸ்பெகிஸ்தான். ஏற்கனவே காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இது போன்ற செய்திகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் டாக்-1 மேக்ஸ்(Doc-1 Max) எனும் இருமல் மருந்து மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இந்த மருந்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று. இந்நாட்டில் சமீபத்தில் சில குழந்தைகள் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Doc-1 Max எனும் இருமல் மருந்தை இவர்கள் அதிக அளவில் எடுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த Doc-1 Max எனும் சிரப்களில் எத்திலீன் கிளைகோல் எனும் நச்சு பொருள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சிரப்பை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கிளினிக்கில் உள்ளவர்களின் பரிந்துரையின் பெயரில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அனைத்து மருந்து கடைகளிலும் இருந்தும் இந்த இருமல் மருந்துகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுவரை 7 சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: கால்பந்து உலகின் பிதாமகன் பீலே காலாமானார்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பயன்படுத்துங்கள்.