2023 தைப்பூச திருநாள் மற்றும் அதன் மகிமையும் முழு விவரம்

0
20

2023 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவின் முக்கியத்துவம் மற்றும் தேதி, நேரம் போன்றவற்றை இந்த பதிவின் மூலம் அறியலாம்.

அழகென்ற சொல்லுக்கு முருகா என்று நாள்தோறும் வணங்கும் தமிழ் கடவுளான முருப் பெருமானின் மாதமாக இந்த தை மாதம் இருக்கின்றது. தை மாதத்தில் வருகின்ற பூச நட்சத்திரம் தைப்பூச நாளாகவும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகவும் காணப்படுகிறது. பெரும்பாலும் இந்த தைப்பூச திருநாளில் பெர்ணமியாகவும் அமையும்.

முருக கடவுளுக்கு எண்ணற்ற சிறப்புக்குரிய தினங்கள் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் வார நாட்களில் செவ்வாயன்று முருகனுக்கு உகந்த திருவிழா நாட்களாக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றது.

2023 தைப்பூச திருநாள் மற்றும் அதன் மகிமையும் மழு விவரம்

அதில் தைப்பூச திருவிழா வெகு சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது. இந்த தைப்பூச நாளில் தான் முருகன் வள்ளியை மணம் முடித்ததாகவும், உலகின் முதலில் நீர் தோன்றி அதன் அடிப்படையில் மீதமுள்ள அனைத்தும் தோன்றியதாகவும் அதுவும் தைப்பூச நாளில் என கூறப்படுகிறது.

மேலும், அரக்கனை சூரசம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கியதும் இந்த தைப்பூச நாளாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா உலகெங்கிலும் உள்ள முருகப் பெருமானின் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

2023ம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா:

தை மாதம் 22ம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09:16 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. அதனால் பிப்ரவாரி 5ஆம் தேதிதான் நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம் இருக்கிறது என்பதால் அன்று தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது.

தைப்பூச திருவிழாவின் புராணக்கதை:

உத்தராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் பார்க்கப்படுகிறது. அதாவது தேவர்களின் பகல் பொழுது தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மகரம் எனும் புண்ணிய ராசியில் சூரியனும், தன் சொந்த வீட்டில் சந்திரனும் நிற்க தை பூச திருநாள் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தைப்பூச நாளில் தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. தைப்பூச நாளில் தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் தெய்தார். பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி, கையில் வேல் தாங்கி முருகன் நின்ற தினம் இன்று தான். அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் நடராஜர், ஆனந்த தாண்டவம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம் தான்.

தைப்பூச திருவிழாவின் நம்பிக்கைகள்:

  • குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காதுகுத்துதல் நிகழ்வு இந்த தைப்பூச திருநாளில் செய்வது சிறப்புடையது.
  • இந்த திருநாளில் குழந்தைகளுக்கு வித்யா ரம்பம் எனும் எண்ணும் எழுத்தும் கற்றுத் தரும் நிகழ்வு நிகத்தப் பெறுவது சிறப்புக்குரியது.
  • புதிய தொழில் தொடங்குவது போன்ற மங்கலகரமான செயல்களை செய்ய உகந்த நாளாகவும் இருக்கின்றது.
  • வள்ளியை மணம் முடித்த நாளாக இருப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருப் பெருமானை வணங்கினால் திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைய வழிவகை செய்வான் முருகன் என்பது நம்பிக்கை.
  • முருகப் பெருமானை இந்த தைபூச நாளில் விரதம் மேற்கொண்டு பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி என பல்வேறு காவடிகளை சுமந்து நடை பயணமாக சென்று எம்பெருமானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் பக்தர்கள்.
  • இப்படி செய்வதால் வாழ்வில் நன்மை பெருகும் என்றும் தீராத நோய்கள் நீங்கி ஆரோகியம் நிலைக்கும் என்பது தீராத நம்பிக்கை.

இதையும் படியுங்கள்: வெகு விமர்சையாக நடைபெற்ற பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் 

இவ்வளவு சிறப்புக்குரிய தினமான தைப்பூசத்தன்று பக்தர்கள் அதிகாலை குளித்து கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம், அருணகிரிநாதர் பாடல்களை பாடியும் ஆடியும் மனதார நினைத்து முருக பகவானின் ஆலயம் சென்று தரிசனம் முடித்து வருவது சிறப்புக்குரியதாக காணப்படுகிறது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here