கேரளா லாட்டரியில் ஆட்டோ டிரைவர் அனுப்பிற்கு ஓணம் மெகா பம்பர் குலுக்கலில் 25 கோடி வென்றவருக்கு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி என அனைத்து வகையான பிடித்தம் போக 15.75 கோடி தான் கிடைக்கும் என தகவல்.
கடந்த இரண்டு தினங்களாக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தான் அனைவருக்கும் டிரன்டிங்கில் இருந்தார். காரணம் அவர் ஓணம் பண்டிகைக்கான பம்பர் லாட்டரி சீட்டில் 25 கோடி பரிசு கிடைத்துள்ள தகவலால்.
இந்நிலையில், அனுப்பிற்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருந்தது. இவர் பல பிரச்சனைகளால் வெளிநாட்டிற்கு சென்று சம்பாதித்து வரலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்ட மழை கொட்டியது.
தமிழகத்தில் லாட்டரி சீ்ட்டால் பல உயிரிழப்புகள் நேர்வதால் இதனை அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மறைமுகமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வது குற்றச் செயலாக இன்றும் பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், கேரளா அரசு இதனை சட்டரீதியாக விற்று வருகிறது. இதனால் பல ஏழை மக்களும் கோடிஸ்வரர்கள் ஆகி வருகின்றனர்.

இதைபோலவே கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவருக்கு 12 கோடி கிடைத்ததாம். ஆனால், அவர் அதனை தன் உறவினர் மற்றும் நண்பர்களிடம் கொடுத்து பல சிக்கலில் இருந்து வருவதாக அவரே கூறியிருந்தார்.
அனுப்பிற்கு அட்வைசும் செய்து வந்தார் இந்த பணத்தை உறவினர் மற்றும் நண்பர்களிடம் கொடுக்க வேண்டாம். முழுவதுமாக அல்லது முடிந்த வரை டெப்பாசிட் செய் என்று சொல்லி இருந்தார்.
இந்நிலையில், குலுக்கலில் கிடைத்த 25 கோடியில் வருமான வரி பிடித்தம் மற்றும் ஜிஎஸ்டி, முகவர் கமிஷன் என அனைத்து வரிகளும் போக ரூ 15.75 லட்சம் தான் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது.