இந்திய சுதந்திர போராட்டத்தில் வரிக் கட்டாமல் ஆங்கிலேயரை எதிர்த்து வந்த புலித்தேவனின் படைத்தளபதியின் வீரத்தை போற்றும் வகையில் இன்று 262 வது குருபூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவல் என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை ஆட்சி செய்து வந்தவன் புலித்தேவன். இவரது தலைமை தளபதியாக இருந்தவர் ‘வெண்ணி காலாடி’. காலாடி என்றால் காலாட் படை வீரர்களை குறிப்பதாகும். புலித்தேவனை நேரடியாக சென்று தாக்க முடியாது என்று எண்ணிய ஆங்கிலேய படைத் தளபதி கான்சாகிப் என்ற மருதநாயகம். இரவில் யாரும் அறியாத வேலையில் புலித்தேவனின் கோட்டையை முற்றுகையிட முற்பட்டான்.
இதன் காரணமாக கோட்டைக்கு அருகில் உள்ள காட்டில் கான்சாகிப் தனது படைகளை அமர்த்தி முகாமிட்டிருந்தான். இதை அறிந்த வெண்ணி காலாடி அந்த முகாமை முற்றுகையிட்டு தாக்கினான். அப்போது மறைந்திருந்த ஆங்கிலேய படையினர் அவரை வெண்ணி காலாடியை தாக்கினர். தாக்கியதில் அவரின் வயிறு கிழிக்கப்பட்டு குடல் வெளியே வந்ததது.

சற்றும் வருந்தாமல் வயிற்றிலிருந்து வெளி வரும் குடலை வயிற்றுக்குள் அனுப்பி தன் தலைப்பாகையால் வயிற்றை இறுக கட்டிக் கொண்டு அந்த கான்சாகிப் என்கிற மருதநாயகத்தின் படையை புறமுதுகிட்டு ஓட செய்தான். அந்த போரில் வெற்றியும் கண்டான் வெண்ணி காலாடி.
இந்த செய்தியை அறிவிக்க தன் குதிரையில் ஏறி புறப்பட்ட வெண்ணி காலாடி புலித்தேவனின் அவைக்கு வந்து நடந்தவற்றை கூறி விட்டு அவரின் மடியிலேயே மரணம் அடைந்தான். அவரின் தியாக உணர்வையும் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டதையும் நினைவு கூறும் விதமாகவும் போற்றும் விதமாகவும் வருடா வருடம் அவருக்கு குருபூஜை விழா நடத்தப்படுகிறது.
இன்று அவரது நினைவு தினமாகவும் வீர வணக்க நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திரத்திற்கு பாடுப்பட்ட மாவீரர்களை போற்றுவோம் அவரின் துணிவை எண்ணி சுதந்திர தாகத்தை எண்ணி போற்றுவோம்.
இதையும் படியுங்கள்: மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 19 லட்சம் கட்டணம் செலுத்தி பயணித்த இளைஞர்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.