இன்ஃப்ளுவென்சா காய்ச்சல் கொரோனா தாக்கத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இக்காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 282 ஆக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின் தற்போது மீண்டும் இன்ஃப்ளுவென்சா காய்ச்சல் அதிகரித்துள்ளதாகவும் தகவல்.
கோவிட் 19 தாக்கத்தால் உலக மக்கள் அனைவரும் பெரும் துயரத்திற்கு ஆளாகி பல உயிர் இழப்புகளையும் கண்டனர். இந்த கொடிய நோயானாது உலக மக்களை உலுக்கியது. பல மாதங்கள் ஊரடங்கு என்ற பெயரில் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து பல இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

ஓரு பக்கம் கொடிய நோயின் தாக்கம் மறுபக்கம் மக்கள் தன் வாழ்வாதாரத்தை இழந்து எந்த ஓரு வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தனர். இந்த கோவிட் 19 க்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசிகளை பல நாடுகள் மக்களுக்கு செலுத்தி அந்த கொடிய நோய் தொற்றிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகின்றனர்.
இதையும் கவனியுங்கள்: குழந்தைகளைத் தாக்கும் தக்காளி காய்ச்சல் மத்திய சுகாதர நிறுவனம் தகவல்
இக்கொடிய நோயிலிருந்து தப்பிக்க அரசு தரும் முதல் தகவல் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கை, கால்களை தூய்மையாக கழுவி விட்டு வீட்டிற்குள் வருதல், எங்கு சென்றாலும் முககவசம் அணிதல் இவைகளை தலையாய கடைமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்புளுன்ஸா காய்ச்சால் யாரும் சிகிச்சை பெறவில்லை.எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல்.8 பேருக்கு டெங்கு காய்ச்சல்.தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதகவும் ,தேவையான அளவு மருந்து கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.