மாநிலங்களவை தேர்தலில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் உட்பட மாநிலங்ககளில் மாநிலங்களைவை உறுப்பினர்களின் 57 பேரின் பதவி காலம் ஜுன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. அதனை அடுத்து காலியாக உள்ள பதவிகளுக்குக்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததிருந்தது.
தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் திமுக 3 இடங்களுக்கும், காங்கிரஸ் 1 இடத்திலும், ஆதிமுக 2 இடங்களிலும் ஆக 6 இடங்களுக்கும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன. 7 பேர் சுயச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட கல்யாண சுந்தரம், கிரி ராஜன், ராஜேஷ் குமார், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப. சிதம்பரம், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சுயேட்சையாக போட்டியிட்ட 7 வேட்பாளர்களுக்கு எந்த சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவும் இல்லாததால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் 57 இடங்களுக்கு இந்த தேர்தலில் 41 பேர் பேட்டியின்றி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு ஜுன் 10 தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.