துபாயில் வேலை செய்து வரும் ஹோட்டல் ஊழியர் சஜேஷ் இவர் கேரளாவை சார்ந்தவர் இவருக்கு 55 கோடி லாட்டரி மூலம் பரிசு தொகை கிடைத்துள்ளது. இதை தான் பணியாற்றும் ஊழிர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையை அந்த அரசாங்கமே நடத்தி வருகின்றது. இதில் பலர் பல கோடிக்கு அதிபதியாகி உள்ளனர். ஆட்டோ ஊழியர் பெயின்ட் ஊழியர் என அடித்தட்டு மக்களுக்கும் இப்பரிசு போட்டிகள் கிடைப்பது அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
இந்த லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வாழ்பவர் அம்மாநில ஆன்லைன் மூலம் வாங்கி உபயோகிக்கலாம் ஆனால், தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றம். தமிழகத்தில் பல உயிரிழப்புகள் நேர்ந்ததால் இந்த லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
இதையும் படியுங்கள்: சபரிமலைக்கு சென்னையிலிருந்து வாராந்திர சிறப்பு ரயில் தொடக்கம்

தற்போது, துபாயில் ஹோட்டல் ஊழியாராக பணியாற்றி வரும் சஜெஷ் பல ஆண்டுகளாக துபாய் ஓமன் போன்ற நாடுகளில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனை மூலமாக கேரளா லாட்டரி சீட்டு வாங்கி வருகின்றார். இந்நிலையில், அவருக்கு 55 கோடி பரிசு தொகையாக கிடைத்துள்ளது.
அவர் பணிபுரியும் ஹோட்டலில் சக ஊழியர்கள் 20 பேருடன் சேர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த லாட்டரிக்கு 55 கோடி பரிசு தொகை கிடைத்ததால் அதை அந்த 20 நபரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். இதனால் அந்த 20 ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த லாட்டரி சீட்டின் மூலம் பயன் பெறுபவர்களும் இருக்கின்றனர் இதனால் தன் வாழ்வை பறிக் கொடுத்தவர்களும் இருக்கின்றனர். நாம் தான் எதை செய்தாலும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.