BB ஹவுஸ்மெட்டுகளுக்கு இந்த வாரம் ஃப்ரிஸ், ரிலிஸ், லூப் போன்ற டாஸ்க்குகளை கொடுத்து வருகின்றனர். இந்த டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் வந்து பார்த்து விட்டு செல்வர்.
விஜய்டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை முடித்து 6வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஓவ்வொரு வாரமும் ஓரு டாஸ்க்கு வழங்கப்படும். அதில் தற்போது ஃப்ரிஸ் டாஸ்க்கு நடைபெற்று வருகிறது. இந்த ஃப்ரிஸ் டாஸ்கின் போது குடும்ப உறுப்பினர்கள் வந்து அவர்களை மகிழ்விப்பர்.
இது அனைத்து சீசன்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த ஃப்ரிஸ் டாஸ்கின் போது பிக்பாஸ் ஹவுஸ்மெட்சில் ஓருவரின் குடும்ப உறுப்பினர் வருவர் அப்போதும் அவர்களை கண்டு கொள்ளாமல் ஃப்ரிஸ் டாஸ்க்கை மழுமையாக செயல்படுத்த வேண்டும். பின்னர், பிக்பாஸ் ஃப்ரிஸ் ரிலிஸ் எப்போது சொல்கிறாரோ அப்போது தான் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாட வேண்டும் இதுதான் இந்த ஃப்ரிஸ் டாஸ்க்.

இந்த முறை டாஸ்கின் போது முதல் ஆளாக மைனா நந்தினியின் குடும்பத்தாரின் மகன் மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் கலந்து கொண்டார். இவர்கள் இருவரையும் வரவேற்ற நந்தினி கட்டி அணைத்து வரவேற்றார். வெகு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தங்களது குடும்ப உறுப்பினர்களை பார்க்காமல் இருந்து வந்த ஹஸ்மெட்டுகளுக்கு இந்த டாஸ்க் மிகப் பெரிய வாய்ப்பாக காணப்படுகிறது.
மைனா நந்தினியுடன் உரையாடிய குடும்பத்தார் நேரம் முடிவடைந்ததும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், அமுதவாணனின் குடும்பத்தாரான அவரது மனைவி அவரது மூன்று குழந்தைகளும் வந்தனர். அமுதுவின் மகன் தந்தை பெரியார் போல பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதை அனைவரும் பாராட்டினர். தொடர்ந்து விக்ரம், அசீம் போலவும் நடித்து காட்டி மாஸ் காட்டினார்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS TAMIL 6: நேற்று வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் விபரம்
இந்த வார நாமினேட் லிஸ்ட்டில் அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி, மணிகண்டன், ஷிவின், கதிரவன், ஏடிகே இருக்கின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.