இன்று நவம்பர் 4ல் ரீலிசாகும் திரைப்படங்கள் ஓரு பார்வை

0
11

இன்று நவம்பர் 4ல் ரீலிசாகும் திரைப்படங்கள் ஓரு பார்வை. கடந்த மாதம் முழுவதுமாகவே பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வந்தது. அதில் மிக முக்கியமான கதைகளத்தை பெற்று வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை புரிந்து வரும் பொன்னியின் செல்வன் முதலாவதாக காணப்படுகிறது.

இதை தொடர்ந்து இப்படத்துடன் போட்டியிட்ட நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். பின் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்ததிக்கேயனின் நடிப்பில் வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் என ரசிகர்களின் நல் ஆதரவை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கின்றது.

இந்த நவம்பர் 4 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் படங்கள் யாவும் சிறிய அளவு பட்ஜெட் படங்கள். இதில் காமெடியில் சிரிக்க வைக்க சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் படம் மழுநீள நகைச்சுவை படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இன்று நவம்பர் 4ல் ரீலிசாகும் திரைப்படங்கள் ஓரு பார்வை

இப்படத்தில் நடிகர் ஜிவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, டிடி என்கின்ற டிவி சேனல் தொகுப்பாளினியான பிரியதர்ஷினி, சம்யுக்தா, அம்ரிதா, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

அடுத்து நித்தம் ஓரு வானம் என்ற படத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரீது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா போன்றோர் நடித்துள்ளனர். இது முழுவதுமாக ரொமான்ஸ் காதல் படமாக களத்தில் இன்று வெளியாகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார்.

அடுத்ததாக, கோமாளி படத்தை இயக்கிய பீரதிப் ரங்கநாதன் ல்வ் டுதே என்ற இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இவர் இப்படத்தில் அறிமுக கதாநாயகனாக இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

4554 என்ற படத்தை முருகா, கோழி கூவுது படங்களில் நடித்த அசோக் குமார் 4554 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் ஒரு காரின் நம்பராகும். காரை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. போதிய புரொமோஷன் இல்லாததால் இந்தப் படம் அதிகம் கவனம் பெறவில்லை.

கண்டேன் உன்னை தந்தேன் என்னை – தங்கவேலு கண்ணன் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம். ரொமான்டிக் ஜானரில் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here