கமலஹானுக்கு மண்டியிட்டு மலர் செண்டு வழங்கி நெகிழ்ந்த விஜய்சேதுபதி

0
3

கமலஹானுக்கு மண்டியிட்டு மலர் செண்டு வழங்கி கையில் முத்தமிட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் விஜய்சேதுபதி. டிஎஸ்பி பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியை பாராட்டிய உலக நாயகன்.

நடிகர் விஜய்சேதுபதி முன்னணி நடிகராக வலம் வருபவர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி வெப்சீரியஸ், மௌனப்படம் என பலவற்றில் பிசியாக நடித்து வருபவராக இருக்கின்றார். தற்போது தமிழில் இயக்குனர் பொன்ராம் உருவாக்கத்தில் DSP படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு உலக நாயகன் வந்தார்.

உலக நாயகனை வரவேற்ற விஜய்சேதுபதி மலர் செண்டு ஓன்றை கையில் வைத்து கொண்டு மண்டியிட்டு அவரிடம் கொடுத்து அவரது கையில் முத்தம் கொடுத்து தன் அன்பை பரிமாரினார் இந்த செயலை பார்த்த அனைவரும் வியந்தும் நெகிழ்ந்தும் போனார்கள்.

கமலஹானுக்கு மண்டியிட்டு மலர் செண்டு வழங்கி நெகிழ்ந்த விஜய்சேதுபதி

பின்னர் பேசிய கமல் “என்னைப்போலவே விஜய் சேதுபதியும் சினிமாவை நேசிப்பவர். நான் எப்படி மார்லன் பிராண்டோ முன் மண்டியிட்டு அவர் கையில் முத்தம் இடுவேனோ, அதுபோல இன்று அவர் என் காலில் விழுந்துள்ளார். நாளை இன்னொரு கலைஞன் அவர் காலில் அப்படி விழ உருவாகி வருவான்” எனக் கூறியுள்ளார்.

அதன் பின் DSP படத்தை பற்றி பேசுகையில், டிரைலரை பார்த்தேன் படம் சிறப்பாக இருக்கிறது படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். நான் நலமாக இருக்கிறேன் என்றும் கூறி வெளியேறினார்.

அதனை தொடர்ந்து பேசிய விஜய்சேதுபதி, ”விக்ரம் படத்தில் பணியாற்றிய போது உங்க மனசுக்கு பிச்ச படத்த பண்ணுங்கனு சொன்னார் கமல் சார். என் தலைமுறை மட்டும் அல்ல எத்தனை தலைமுறை வந்தாலும் நீங்கள் தான் இன்பிரேஷன் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்: இன்று திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியான படங்கள் விபரம்

டிஎஸ்பி படத்தில் கதாநாயகியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார் இவருடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here