சென்னை மாநகர பேருந்துகளை அலங்கரிக்க வரும் புதிய வசதி

0
7

சென்னை: சென்னை மாநகர மக்களின் பயணத்திற்கு முதன்மையானதாக இருப்பது மாநகர பேருந்துகள் இதில் பல்லாயிரகணக்கான மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் தேவையை அறிந்த தமிழக அரசும் தமிழக போக்குவரத்துத் துறையும் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. பெண்களின் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மழுவதும் பெண்கள் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் வசதி இந்த பேருந்துகளை விரைவில் அடையாளம் தெரிந்து கொள்ள அந்த பேருந்து முன்பகுதி மற்றும் பின் பகுதியை பிங்க் நிறத்தில் மாற்றுதல் என பல அதிரடி நடவடிக்கைகளை செய்து வருகிறது.

அது போன்ற திட்டங்களில் புதியதாக ஓரு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. இனிவரும் காலங்களில் ஓவ்வொரு பேருந்து நிறுத்தத்தின் பெயர்களையும் 300 மீட்டர்க்குள்ளேயே அறிந்து சொல்லும் ஸ்பீக்கர் பொருத்தப்பட உள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளை அலங்கரிக்க வரும் புதிய வசதி

இதன் மூலம் பயணிகள் தாங்கள் எங்கு இறங்க வேண்டுமோ அங்கு சரியான முறையில் இறங்கி தங்களது பயணங்களை யாருடைய உதவியும் இன்றி செல்லலாம். இந்த திட்டத்தை 2019ம் ஆண்டிலேயே தொடங்க இருந்த போது உலகமெங்கும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இந்த பணி அப்படியே போடப்பட்டது.

இதற்காக பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு ஸ்பீக்கர்கள் மூலம் ஓளிப்பரப்பபடும். அதன்படி, பஸ் நிறுத்தங்களை அடைவதற்கு முன்பாக 300 மீட்டர் தூரத்தில், நிறுத்தங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்ய போக்குவரத்துத்துறை முடிவெடுத்துள்ளது. இடைவெளி நேரங்களில் விளம்பரங்கள் ஓளிப்பரப்படும் இதன் மூலமும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இலவச டேட்டா தருவதாக வரும் செய்தியை நம்பவேண்டாம் காவல்துறை

சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் என பலர் கலந்து கொண்டு இத்திட்டதை தொடங்கி வைக்கின்றனர். முதற்கட்டமாக சென்னை மாநகரில் 150 பேருந்துகளில் அமல்படுத்தப்படுகிறது.

இது போன்ற பிற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here