இந்தியாவில் பரவும் புதிய வகை XBB கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

0
10

இந்தியாவில் கொரோனா உருமாற்றம் அடைந்து XBB கொரோனா பரவல் GISIAD என்ற வைரஸ் உருமாற்றம் குறித்தான சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தகவல். தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களில் XBB என்ற கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்.

கொரோனா வைரஸ் எப்படி பிரபலமோ அது போல முழு ஊரடங்கு என்ற வார்த்தைகளுக்கு முழு அர்த்தத்தை அந்த கொரோனா வைரஸ் காலங்களில் கண்டோம். கிட்டத்தட்ட ஓண்றரை ஆண்டு காலம் இந்த வைரசின் தாக்கம் இருந்ததால் உலக மக்கள் அனைவரும் பாதிப்படைந்தனர் இதனால் பல உயிரிழப்புகளும் அனைத்து நாடுகளில் இருந்தது.

இதையும் படியுங்கள்: கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

முன்னணி நாடுகளாக விளங்கும் அமெரிக்கா, ரஷ்யா என பல நாட்டு மக்களின் உயிரை பறித்தது. குழந்தைகளின் நலன் கருதி ஓன்றரை ஆண்டுகள் பள்ளிக்கூடங்கள் பக்கமே குழந்தைகள் போகாமல் இருந்ததால் தற்போது பள்ளிக்கு சென்று படிக்கும் பழக்கம் மிகவும் புதியதாக தோன்றுகிறது.

இந்தியாவில் பரவும் புதிய வகை XBB கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

இது போன்ற காலகட்டங்களில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகின மற்றும் பிரபலம் அடைந்தது. இந்த மாதிரியான வைரஸ் தொற்றுக்கு முன்னெச்சரிக்கை என்ன என்றால் முககவசம் அணிதல், இடைவெளி விட்டு நிற்றல், கை, கால்களை தூய்மையாக பேணுதல் மற்றும் சோப் போன்ற திரவியங்களை கொண்டு கழுவுதல். வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு வந்தால் முதல் காரியமாக முகம், கை, கால் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருத்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்த தன் காரணமாக தற்போது சமூகத்தில் இயல்பு நிலை நீடித்து வருகின்ற இச்சூழுலில் தற்போது புதிய வகை கொரோனா உருமாற்றம் பெற்று வேறு வேறு பெயர்களில் வந்து மனிதர்களை பாதித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது, புதிய வகை கொரோனாவின் உருமாற்றத்தில் ஓமைக்காரனிலிருந்து இப்போது XBB என்ற வைரஸ் இந்திய மனிதர்களிடையே பரவி வருவதாக ஆய்வு கூறுகின்றது. இதுவரை 9 மாநிலங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here