ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு ‘கற்றார்’ என்ற புதிய டிஜிட்டல் பிளட்ஃபார்மை அறிமுகப்படுத்துயுள்ளர்.

0
3

ஏ.ஆர்.ரஹ்மான்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘கற்றார்'(KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளார். இந்த கற்றார் தளம் குறித்து அவர் கூறுகையில்,

‘இந்த டிஜிட்டல் தளம் இசை மற்றும் பிற கலைகளுக்கான முக்கிய தளமாகும். குறிப்பாக தனி இசைக்கலைஞர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். இதில் கலைஞர்கள் நேரடியாக பங்கேற்று தங்கள் படைப்புகளை பட்டியலிட்டு பணமாக்கலாம். இந்த தளம் புதிய திறமையான கலைஞர்களுக்கு பாலமாக அமையும். எதிர்காலத்துக்கான தளமாக இது இருக்கும். புதிய ஐடியாக்களை கொண்டிருக்கும் கலைஞர்கள் அதனை உலகிற்கு அறிமுகப்படுத்த இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஐடியாக்கள் மற்றும் கிரியேட்டிவிட்டியால் தான் உலகம் மாறுகிறது’ என்று அவர் கூறினார்.

a.r.rahman launches katraar digital plotform

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை ‘கற்றார்’ தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் இந்த தளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here