இந்திய கால்பந்து வீரரான சுனில் சேத்ரியை வைத்து சிறப்புத் தொடர் உருவாக்க உள்ளது FIFA அமைப்பு. இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் சுனில் தேத்ரியை வைத்து சிறப்புத் தொடர் ஓன்றை உருவாக்க உள்ளது FIFA அமைப்பு.
சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்தவர்களில் இந்தியாவிற்காக இதுவரை 84 கோல்கள் அடித்துள்ள சுனில் தேத்ரி, 4 வது இடத்தில் உள்ள மெஸ்ஸிக்கு அடுத்ததாக உள்ளார்.
இந்த பட்டியலில் அதிக கோல் அடித்த போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து அணியின் நட்சத்திரம் ரொனால்டோ 117 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவதாக ஈராக் அணியின் அலி டேய் உள்ளார். மூன்றாம் இடத்தில் மொக்தார் தஹாரி (மலேஷியா) உள்ளார். நான்காவது இடத்தில் அர்ஜென்டினா அணி விரர் மெர்ஸ்ஸி 86 கோலுடன் உள்ளார்.

சுனில் சேத்ரி ஆந்திர மாநிலம் செகண்ட்ராபாதில் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் தந்தை கே.பி.சேத்ரி. இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். அவரது அம்மா சுசிலா சேத்ரி நேபாளத்தை சேர்ந்தவர். சேத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்தமான விளையாட்டு. சச்சின்தான் அவருக்கு பிடித்த வீரர். அதனால் அவரும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பி தன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை அணுகியுள்ளார். “கிரிக்கெட் கிட் கொண்டு வந்தால் பயிற்சி கொடுக்க தயார்” என சொல்லியுள்ளார் அந்த ஆசிரியர். ஆனால் கிரிக்கெட் கிட் வாங்க காசு இல்லாததால் எனது கிரிக்கெட் கனவை கலைத்து விட்டு கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தியாக சுனில் சேத்ரியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி நேற்று தகுதி பெற்றது. ஹாங்காங் அணியுடன் நேற்று நடைபெற்ற தகுதிசுற்று போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணியின் 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.