டிசம்பர் 9ந் தேதி வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் ஓரு பார்வை

0
18

டிசம்பர் 9ந் தேதி வெள்ளிக் கிழமை வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் நாய் சேகர் ரிட்டன்ஸ் முதல் பாபா ரீரிலிஸ்வரை படங்களின் விபரங்களை இப்பதிவில் அறியலாம்.

2002ம் ஆண்டு வெளியான பாபா திரைப்படத்தின் ரீரிலிஸ் பணிகளை முடித்துள்ள படக்குழு டிஜிட்டல் முறையாலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் இசையில் மெருகேற்றியும் ஓரு சில காட்சிகளை நீக்கியும் புதிய வடிவில் ரசிகர்களுக்கு வழங்க நடிகர் ரஜினியும் இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணாவும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். வருகிற 10ந் தேதி வெளியாவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையையும் தயாரிப்பையும் ரஜினிகாந்த் செய்தார் என்பது நாம் அறிந்ததே.

டிசம்பர் 9ந் தேதி வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் ஓரு பார்வை

வெகு நாட்களுக்கு பிறகு திரையரங்கில் அடி எடுத்து வைத்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு தன் நகைச்சுவையால் தமிழகத்தை நிலைக்குலைய வைத்திருப்பவர். மீம்ஸ்களின் கடவுள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வடிவேலுவின் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் 9ந் தேதி திரையரங்குகளுக்கு வருகிறது. வடிவேலு நாயகனாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜூவா நடிப்பில் வரலாறு முக்கியம் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக காஷ்மீரா நடித்துள்ளார். ஷான் ரகுமான் இசை அமைப்பில் சக்தி சரவணன் ஓளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் வருகிற 9ந் தேதி வெளியாகிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஜூவா இப்படம் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் நகைச்சுவை போல காணப்படும் என்று கூறியுள்ளார். அதனால் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கேஜிஎப், காந்தாரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த கன்னட சினிமாவில் இருந்து தயாராகி உள்ள படம் தான் விஜய் ஆனந்த். பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ள இப்படம் வருகிற 9-ந் தேதி தமிழிலும் வெளியாகிறது. விஜய் சங்கரேஸ்வர் என்கிற தொழிலதிபரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள குருமூர்த்தி திரைப்படமும் வருகிற டிசம்பர் 9-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார்.

பிரியாமணி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் DR.56 இப்படமும் 9ந் தேதி வெளியாகிறது. இப்படத்தை இயக்கியவர் ராஜேஷ் ஆனந்தலீலா இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக ப்ரியாமணி நடித்திருக்கிறார். இவருடன் மஞ்சுநாத் ஹெக்டே, ரமேஷ் பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரம்யா நம்பீசன் மற்றும் அசோக் செல்வன் நடித்துள்ள படம் எஸ்டேட் இந்த படம் த்ரில்லர் படமாகவும் இரவில் மட்டுமே எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கின்றது. இந்த படத்தில் கலையரசன், சுனைனா, டேனியல் ஆனி, கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: IMDB 2022: தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் தனுஷ்

இப்படங்களுடன் ஸ்ரீ ராஜமணிகண்டன் மற்றும் தாதா படங்களும் அன்று வெளியாக காத்திருக்கின்றன.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here