வாரிசு, துணிவு படங்களுக்கு கொடுத்த வரவேற்பை ‘கடைசி விவசாயி’ படத்திற்கும் கொடுத்திருக்க வேண்டும். மேலும், எங்கு பிசினஸ் இருக்கிறதோ அங்கே நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்றும் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது வழங்கும் விழாவில் இயக்குனர் அ.வினோத் பேச்சு.
நடிகர் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் இந்தாண்டு பொங்கலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. இன்றளவும் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் சிறப்பான வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. இந்த இரு படங்களையும் இரு ரசிகர்களும் கொண்டாடி வந்தனர் என்பது நாம் அறிந்ததே.
துணிவு திரைப்படமானது ஓரு வங்கி எப்படி எல்லாம் மக்களிடம் பல்வேறு பொய்யான திட்டங்களையும் ஆசை வார்த்தைகளையும் கூறி இன்சூரன்ஸ் மற்றும் கடன் வழங்குதல், ஷேர் மார்க்கெட் என அனைத்திலும் நடுத்தர மக்களின் பணத்தை கொண்டு அவர்களை ஏமாற்றி வருகிறது என்பதை விளக்கும் படமாக அதிரடி காட்சிகளுடன் ஜிப்ரான் இசையில் மாஸ் படமாக எடுத்திருந்தார் இயக்குனர்.

இந்த நிலையில், துணிவு படத்தின் இயக்குனர் வினோத் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது வழங்கும் விழாவில் பங்கு பெற்று பேசிய போது, எங்கு பிசினஸ் இருக்கிறதோ அங்கு நேர்மையை எதிர்பார்க்க முடியாது ரசிகர்கள் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு கொடுத்த வரவேற்பை விஜய் சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்திற்கும் கொடுத்திருக்க வேண்டும் என்று பேசினார்.
சமீபத்தில், “இயக்குநர் மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், அதை காணத் தவறிய நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று இயக்குநர் மிஷ்கின் ஆதங்கத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: உலகளவில் இரண்டாமிடம் பிடித்த இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி
இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.