ஆடி பதினெட்டில் காவிரி அன்னை வழிபாடு

0
9

ஆடி பதினெட்டு ஓரு முக்கியமான விழாவாக கொண்டாப்படுகிறது. புதுமண தம்பதிகள் புதுத் தாலியினை மாற்றிக் கொண்டு காவிரி அன்னையை வழிபடுவது வழக்கமாகவும் ஐதீகமாகவும் உள்ளது.

நீரின்றி அமையாது உலகு என்னும் திருவள்ளுவரின் வாக்கிற்கு இணைங்க காவிரி அன்னையை வழிபடுவது ஆடி பதினெட்டின் தலையாய நோக்கம். இப்படு செய்வது நீரை தரும் காவிரிக்கு நன்றி செலுத்தும் வண்ணம் காணப்படுகிறது.

காவிரி நீரானது ஓக்கேனிக்கலில் இருந்து ஆற்று படுகைகளுக்கு வந்து வங்க கடலில் சங்கமிக்கிறது. இப்படி ஓவ்வொரு ஊரிலும் உள்ள ஆற்றுப் பகுதிகளை கடந்து வரும். காவிரி நீரை ஆற்றுப் படித்துறைகளில் மக்கள் நீராடி காவிரி அன்னையை வழிப்படுவர்.

ஆடி பதினெட்டில் காவிரி அன்னை வழிபாடு

பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே. சந்திரன் என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம். புதன் கலைகளுக்கு அதிபதி. சித்ரான்ன நிவேதனம் இவருக்கு விசேஷம். சுக்கிரன் கொண்டாட்டங்களுக்குக் காரகர். ஆடிப்பெருக்கு நாளில் முக்கியமான இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும் ஜீவாதாரமான பயிர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இன்றைய தின காவிரி வழிபாட்டால் அனைவருக்கும் மேலே சொன்ன மூன்று கிரகங்களின் ஆசியும் பரிபூரணமாகக் கிடைக்கிறது.

காவிரிக்கு தட்சிண கங்கை என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும் என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here