என் குடும்பத்திலும் ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது இதன் விளைவுகளால் உடல் மட்டும் இன்றி மனதளவிலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் இன்றும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது துயரத்திற்கு உரியது என்று பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார்.
சமீபத்தில் டெல்லி துவாரகா என்ற இடத்தில் 17 வயது சிறுமியும் அவரது சகோதரியும் பேருந்துக்காக நிற்கின்ற போது ஓரு பைக்கில் வந்த இருவரில் கையில் வைத்திருந்த ஆசிடை அந்த பள்ளி சிறுமி மீது வீசி சென்றுள்ளார். இதனால் துடித்துடித்த அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
அவளது சகோதரி வழங்கிய ஆதரங்களை வைத்து மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஆசிட் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டதை ஓத்துக் கொண்டுள்ளான் ஓருவன். அதனனை அடுத்து மகளிர் உயர்நீதி மன்றம் ஆசிட் சில்லரையில் எந்த ஓரு கட்டுப்பாடும் இன்றி எளிமையாக கிடைக்க கூடிய அளவில் விற்பனை செய்து வரும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை நினைவு கூர்ந்து சொல்ல வந்த பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாலையோர ரோமியோ ஒருவரால் எனது டீனேஜ் பருவத்தில் என் சகோதரி ரங்கோலி ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். அந்தக் கொடூர தாக்குதலில் இருந்து மீண்டு வர என் சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டியிருந்தது. சொல்ல முடியாத, நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அந்த தருணத்தில் என் சகோதரி உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள். எனது குடும்பமும் சொல்ல முடியாத வேதனைக்குள்ளானது.
அந்தச் சம்பவத்துக்குப் பின் என்னை கடந்து செல்வபவர்கள் யாரேனும் என் மீது ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அந்த பயத்தினால் பல முறை எனது முகத்தை மூடிகொள்வேன். முகம் தெரியாத நபர்கள் என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் எனக்குள் பயம் இருந்துகொண்டே இருந்தது. அந்த தருணங்களில் என்னை அறியாமல் எனது முகத்தை மூடிக்கொண்டுள்ளேன்.
அப்படிப்பட்ட ஆசிட் கொடுமைகள் இன்னும் நிற்காமல், தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: டெல்லி: மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.