இந்தியா முழுவதும் பைக்கில் வலம் வந்து முடித்துள்ளார் நடிகர் அஜித்

0
7

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் வலம் வந்து வெற்றிகரமாக சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார் நடிகர் அஜித்.

நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் சிறந்த விளங்கும் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு பைக்கில் பயணம் செய்வது என்றால் அலாதி பிரியம் ஆதலால் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் இந்தியா மழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தனது உயர்ரக மோட்டார் வாகனத்தின் மூலம் தடம் பதித்து முடித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் துணிவு இப்படத்தில் ராபரி திருட்டு சம்பவம் சார்ந்த படமாகவும் பைக்கில் சாகசம் நிகழ்த்தும் விதத்திலும் அமைந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. கடந்த வலிமை படத்தில் வரும் பைக் ரைடுகளில் இவரது ரசிகர்கள் அவரை மிகவும் பிரம்மிப்புடன் பார்த்து வந்தனர். அப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி ரீதியாகவும் நல்ல படமாக அமைந்தது.

இந்தியா முழுவதும் பைக்கில் வலம் வந்து முடித்துள்ளார் நடிகர் அஜித்

மேலும், துணிவு படத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்திருக்கிறார். சிவாவுடன் இவருக்கு இது 3 வது படமாகும். இப்படத்தை ஜீ ஸ்டூடியோ போனிக்கபூர் தயாரித்து உள்ளார். ஜிப்பரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக காத்திருக்கின்றது. இதை போன்று விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரிப்பில் வாரிசு திரைப்படமும் அதே பொங்கல் தினத்தன்று வெளியாவதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் துணிவு படத்தின் முதல் சிங்கில் பாடல் சில்லா சில்லா வெளியாகி பிரபலம் அடைந்து வருகிறது. அடுத்தது காசேதான் கடவுளடா என்ற பாடலும் நாளை வெளியாவதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அவதார் 2: தி வே ஆப் வாட்டர் இந்தியாவில் முதல் நாள் வசூல்

இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித்குமார் உலக சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பைக்கில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஊக்கமாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.

இது போன்ற தகவலுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here