ரசிகரின் பைக் பஞ்சரை சரி செய்த நடிகர் அஜித் குமார்

0
13

ரசிகரின் பைக் பஞ்சர் ஆன நிலையில் தானே அதனை சரி செய்து உதவிகரம் நீட்டியுள்ளார் நடிகர் அஜித் குமார்.

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பைக் ரைடில் வலம் வருவதை தனக்கு பிடித்த வேலையாக செய்து வருகிறார். ஓவ்வொரு படப்பிடிப்பின் இடைவெளியிலும் தனது பைக்கில் தன் நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு பைக்கில் பயணம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த நிலையில், தற்போது இமயமலை பகுதிக்கு சென்றுள்ள அஜித் பல இடங்களை சுற்றி பார்த்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றி வருகிறார். இந்த பைக் ரைடில் நடிகை மஞ்சு வாரியரும் கலந்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இமயமலை பகுதியில் சில இடங்களை ஹெலிகாப்டர் உதவியுடன் தானே அதனை ஓட்டியும் சுற்றி பார்த்தார்.

பத்ரிநாத், சோம்நாத் போன்ற தலங்குளுக்கு சென்று கடவுளை வணங்கியும் வந்துள்ளார். ஓருசில நாட்களுக்கு முன்பு ஓரு ரசிகர் அவரை சந்திக்க மூன்று நாட்களாக தேதி கண்டிபிடித்து உள்ளார். அந்த ரசிகர் அஜித்திடம் சார் உங்கள மூன்று நாட்களாக தேடி கொண்டு உள்ளோம் என்றார் அதற்கு அஜித் நான் என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைக்காரனா என்ற தன் பானியில் ரசிகர்களை காலய்த்துள்ளார்.

ரசிகரின் பைக் பஞ்சரை சரி செய்த நடிகர் அஜித் குமார்

பின்னர், அவர் ரசிகர்களிடம் விசாரித்து அன்பை பரிமாறி கொண்டு சென்றதை ரசிகர் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்த செய்தி வைராலானது. இந்நிலையில், தற்போது, இமயமலையில் சுற்றிக் கொண்டு இருந்த ஓரு ரசிகரின் பைக் டயர் பஞ்சர் ஆனது அப்போது அவ்வழியாக சென்ற அஜித்திடம் யார் என்று தெரியாமல் உதவி கேட்டுள்ளார் ரசிகர். உடனே சற்றும் எதிர்பாராமல் அதற்கு அவ்வண்டுயில் ஏற்பட்டுள்ள பஞ்சரை அவரே சரி செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என மஞ்சு காஷ்யபா தன் இன்ஸ்டாகிராமில் இது பற்றி கூறி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், என் வாழ்வில் மறக்க முடியா நிகழ்வு என்றும் நானும் அவரும் சேர்ந்து டீ குடித்தையும் தான் பெரும் பாக்கியம் பெற்றவன் என்றும் கூறியுள்ளார்.

நான் இந்த சம்பவத்தைப் பதிவிட இரண்டே காரணங்கள் தான் :

1. மிகப் பெரிய மனிதர் ஒருவர் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் எளிமையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்… அவருடைய ரசிகர்கள், மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறார்.

2. எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ரசிகர் தன் சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அஜித் உதவி செய்ததை டிரன்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here