நடிகர் அஜித் குமார் திருச்சியில் நடைபெறும் 47வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.
திருச்சியில் நடைபெறும் 47வது பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடதல் போட்டி திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் ரைப்பிள் கிளப்பில் நடக்கிறது. இதில் அஜித் குமார் கலந்து கொண்டார்.
தமிழ்த் திரையுலகின் முன்னனி நட்ச்சத்திரமாக வலம் வருபவர் அஜித்குமார். அவர் பன்முக தன்மை கொண்ட மனிதாராக விளங்குகிறார். பைக் ரேசர், கார் ரேசர், இளைஞர்களின் விமான பாகங்களின் பயிற்றுனர் என பல திறமைகளுக்கு சொந்தகாரர். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தனக்கு பிடித்த செயல்களிலும் அதிகமாக பங்கு பெறுபவர்.

இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்று 6 பதக்கங்களை வென்றுள்ளார். அஜித்தின் புதிய பொழுதுபோக்காக துப்பாக்கி சுடுவது பயிற்சி பெறுவது. இவர் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் அடுத்தப் படத்தில் அஜித் நடித்து வருகிறார். அதற்கான முதல்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடித்து முடித்துள்ள அஜித்குமார், லண்டன் சுற்றுப்பயணம் சென்றார்.
அங்கு அவர் பைக் ரைடிங் சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகின. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு ஷாப்பிங் சென்ற கடையில் பெண் ஒருவருக்கு வழிவிட்ட வீடியோ ஒன்றும் வெளியானது. அதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
தற்போது, திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.