பைக் ரைடு மீது தீரா காதல் கொண்ட நடிகர் அஜித் மீண்டும் பைக்குடன் ஐரோப்பாவிற்கு பயணமானார்.
நடிகர் அஜித் கார் பந்தயத்தில் பங்கு கொண்டவர் என்பதும் அவருக்கு ரைடு என்றாலே பிடிக்கும் என்பதும் நாம் அறிந்ததே. தற்போது பிஎம்டபல்யூ (BMW) விலை உயர்ந்த பைக்கில் யூகே மற்றும் ஐரோப்பா என தனது ரைடுகளை தொடர்ந்து விட்டார்.
மங்காத்தா, வலிமை என தனது படங்களில் பைக்கில் அவர் செய்யும் சாகசங்கள் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும். வலிமை படத்தில் வரும் காட்சிகளுக்காக அவர் எடுக்கும் பைக் ரைடு முயற்சிகள் பெரும் வரவேற்பையும் ஆராவாரத்தையும் எப்படி சாத்தியம் என்று எண்ணுமளவில் இருக்கும்.

தற்போது AK61 பட்த்திற்காக படப்பிடிப்புகள் நடந்து கொண்டு உள்ளன. அப்படத்திற்கான அஜித் நடிக்கும் காட்சிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதால் அவருக்கு இயக்குனர் வினோத் அவருக்கு சிறிது ஓய்வு அளித்தார். ஆனால் அந்த ஓய்வை எடுக்க விரும்பாத அஜித் தனக்கு மிகவும் பிடித்தமான பைக் ரைடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.
வலிமை படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் சென்னை முதல் டெல்லி வரை பைக்கிலேயே சென்று பைக் ரைடை அனுபவித்தார். தற்போது வெளிநாடுகளில் தனது பைக் பயணத்தை தொடர்ந்துள்ளார். ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.
அதில் ஒன்று வில்லன் வேடம் எனவும் கூறப்படுகிறது. இதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ள அஜித், நீண்ட தாடி, காதில் கடுக்கன் என செம்ம கெத்தான தோற்றத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகர் அஜித் தனது ஓய்வு நேரத்திலும் பைக்கில் பயணம் செய்து தனது விருப்பத்தின் படி வாழ்க்கையை செதுக்கிக் கொள்கிறார். பைக்கையும் அஜித்தையும் பிரிக்க இயலாது. ஏனெனில் பைக் மீது தீரா காதலர் நடிகர் அஜித்.