கல்லீரல் பாதிக்கப்பட்ட நடிகர் பாலா ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.

0
11

பாலா: தமிழில் ‘அன்பு’ படம் மூலம் அறிமுகமானவர் பாலா. இயக்குனர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரரான இவர் ‘காதல் கிசுகிசு’, ‘அம்மா அப்பா செல்லம்’, ‘வீரம்’, ‘அண்ணாத்த’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 15 வருடத்துக்கு முன் மலையாளத்தில் நடிக்க தொடங்கிய அவர் அங்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்தார்.

actor bala admitted Icu in kochi hospital

இந்நிலையில் நேற்று முன்தினம் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பாலாவின் தாய் மற்றும் மனைவி எலிசபெத் அவரை உடனிருந்து கவனித்து வருகின்றனர். தகவல் அறிந்து சூர்யா படத்தின் படப்பிடிப்பிலிருந்து அவரது அண்ணன் இயக்குனர் சிவா உடனடியாக கொச்சி புறப்பட்டு சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here