தேசிய விருது பெற்ற இயக்குனரான சேகர் கம்முலாவுடன் இணைந்துள்ளார் நடிகர் தனுஷ். படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதில் கலந்து கொண்ட தனுஷ் வேட்டி சட்டை அணிந்து பெரிய தாடியுடன் மாஸாக கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தமிழ், இந்தி, ஆங்கிலம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர். இறுதியாக இயக்குனர் செல்வராகவன் படத்தில் நடித்து முடித்து திரையரங்குகளில் வெற்றி படமாக அமைந்த படம் நானே வருவேன். இப்படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரியுடன் சேர்ந்து வாத்தி என்ற படத்தில் நடித்து வந்தார் இப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி ரிலிஸாக காத்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
இதனை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். கேப்டன் மில்லர் படத்தின் பூஜையிலும் தனுஷ் வெள்ளை வெட்டி சட்டையில் வந்தது குறிப்பிடத்தக்க்கது.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, நடிகர் தனுஷுடன் தனது படத்தின் பூஜையை இன்று தொடங்கியுள்ளார். படத்தின் துவக்க விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சோனாலி நரங் வழங்குகிறார், இது இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது, படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்கள்: ரஜினியின் பிறந்தநாளில் புது பொலிவுடன் பாபா திரைப்படம் ரிலீசாகிறது
அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பியின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரால் பிரமாண்டமாக தயாரிகின்றனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.