நடிகர் விஜய் படத்திற்கே டஃப் குடுத்த நடிகர் தனுஷ் படம்

0
29

நடிகர் விஜய் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் அழகிய தமிழ் மகன் இந்த படம் அந்த வருட தீபாவளி ரீலிஸாக வெளியாகி இருந்தது. அதே வேளையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன் இந்த இரண்டும் படமும் அந்த ஆண்டு  தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் பட வெற்றியை விட தனுஷின் பொல்லாதவன் திரைப்படம் அதிக அளவில் வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தன் இயக்கத்தால் பல நல்ல படங்களை வெளி கொணர்ந்து அதில் நல்ல வெற்றியையும் கண்டுள்ளார். அந்த பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் முடிந்துள்ளதை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் அதனை நேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இதில் சர்ப்ரைசாக அந்த படத்தின் கதாநாயகி ரம்யா கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி தந்தார்.

இதையும் படியுங்கள்: நடிகர் கார்த்தியின் 25 வது படத்தின் பூஜை இன்று தொடங்கியது

நடிகர் விஜய் படத்திற்கே டஃப் குடுத்த நடிகர் தனுஷ் படம்

ஓரு பைக்கை வைத்து ஓரு திரைப்படம் எடுக்க முடியும் என்று தன் பாணியில் கதை அம்சத்தையும் அதில் பல திருப்புமுனைகளையும் காமெடிகளையும் கலந்து ரசிகர்கள் விரும்பும் படத்தை நல்கியவர் வெற்றிமாறன். நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா இவர் சிலம்பரசனுடன் குத்து, தனுஷிடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தரமான படங்களை வழங்கி வரும் வெற்றி மாறனுக்கு பொல்லாதவன் முதல் படமாகவும் வெற்றி படமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, வடசென்னை, ஆடுகளம், அசுரன் போன்ற பல வெற்றி படங்களை தந்தவர். தற்போது நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் நடிகர் சூரியை வைத்து விடுதலை படங்களை இயக்கி வருகின்றார்.

இவருக்கு என்று தனிவழியில் படங்களை இயக்கி அதில் வெற்றி பெற்று ரசிகர்களின் ஆதரவை பெற்றவராக இருந்து வருகிறார். இந்நிலையில், பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினர்.

இந்நிலையில், பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகை திவ்யா ஸ்பந்தனா, தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் ஆகியோர் அப்படம் ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here