இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ராணியை இழந்து வாழும் அந்நாட்டு மக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன் என கமல் குறிப்பிட்டுள்ளார்.
70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த 2ம் எலிசபெத் மறைவை கேட்டு துயரம் அடைந்தேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது அகில உலகத்தவரின் அன்பையும் பெற்றவராக விளங்கியவர் என்றால் மிகையாகாது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் அழைப்பை ஏற்று ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். அவர் கலந்து கொண்ட ஓரே படப்பிடிப்பு விழா அது மட்டும் தான்.
மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தார். இதனிடையே, பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். இவருக்கு தற்போது 96 வயதாகி உள்ள நிலையில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.
இது போன்ற நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.