இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் கமலஹாசன்

0
13

இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் கமலஹாசன். இயக்குனர் ஷங்கரின் உருவாக்கத்தில் வெளியான படம் இந்தியன் இப்படம் மாபெரும் வெற்றியை குவித்தது. ஷங்கரின் பிரம்மாண்டமான காட்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ஷங்கர்.

இப்படத்தில் இரண்டு வேடங்களில் கமல் நடித்திருப்பார். ஊழுலுக்கு எதிராக முதியவராக இந்திய சுகந்திரத்திற்காக போராடிய அவர் ஊழுக்கு எதிராக செயல்படுபவர்களை களை எடுப்பது தான் அவரது முக்கிய பணியாக இருப்பார். ஏ.ஆர். ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் வலுப்பெற்று காணப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கி வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு விருந்தாக இயக்குனர் இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்க முற்பட்டு பல இன்னல்களை கடந்து தற்போது விறுவிறுப்பாக படக்காட்சிகள் இடம் பெற்று வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் கமலஹாசன்

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு குறித்த அரிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் சிலைக்கு முன் கமலஹாசன் புகைப்படம் எடுப்பது போல் இந்த ஒரு புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த சிலை கடந்த 1997ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: 25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஆயிஷா

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here