தமிழ் ரசிகர்கள் நல்ல சினிமாக்களை கைவிட்டது கிடையாது நடிகர் கமல் ஹாசன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டீரைலர் வெளியீட்டு விழாவில் பேச்சு.
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு இப்படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இவர்கள் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாகவே திரையுலகில் வலம் வருகின்றனர். இதற்கு முன் இவர்கள் கூட்டணியி்ல் வெளி வந்த படங்களான விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை யாவும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது.
இதையும் படியுங்கள்: கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் படக்குழு அறிவிபபு
இந்நிலையில், தற்பொழுது தயாராகி வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சிம்பிவின் ஜோடியாக சித்திக் இதானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் டீரைலர் வெளியிட்டு விழா நேற்று தயாரிப்பாளர் வேல்ஸ் பல்கலைக்கழத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து விழா விமர்சையாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக விழா மேடை மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கு நடிகர் சிம்பு ஷீட்டிங்கிலிருந்து ஹேலிகாப்டர் மூலம் சென்னனை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்திற்கு வந்து இறங்கினார். இப்படமானது செப் 15 அன்று திரைங்குகளில் வெளியாகிறது.
சிறப்பு விருந்தினராக இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் பங்குபெற்றார். அப்போது உலக நாயகன் கமல் மேடையில் பேசும் பொழுத் தமிழ் ரசிகர்கள் நல்ல சினிமாக்களை கைவிடுவதில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.