அடுத்த படத்தில் சூரியாவுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்தார் நடிகர் கமல்

0
11

அடுத்த படத்தில் சூரியாவுடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்தினார் நடிகர் கமலஹாசன்.

பன்முக வித்தகர், சகலகலாவல்லவர், பத்மபூஷன், உலக நாயகன், நடிகர் கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஜூன் 3 முதல் உலகமெங்கிலும் பெரும் வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வருடங்களாக எவ்வித படங்களிலும் நடிக்காமல் அரசியலில் இருந்து வந்தார். இப்போது அரசியல் மற்றும் நடிப்பிலும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு நடித்து வந்த படம் தான் விக்ரம் கமலின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த படத்தில் சூரியாவுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்தார் நடிகர் கமல்
அடுத்த படத்தில் சூரியாவுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்தார் நடிகர் கமல்

கைதி, மாஸ்டர் என மெகா ஹீட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூரியா, பகவத்பாசல், நரேன், ஷிவானி போன்ற முன்னனி நடிகர்களை களமிறக்கி புதிய கதைக்கருவில் பயணிக்க வைக்கிறார் இயக்குநர். இசைமைப்பாளர் அனிருத் கலக்கியிருக்கிறார், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி, உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயின்ட் மூவிஸ் வெளியிட்டது.

உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் நடிகர் கமல் நடித்த திரைப்படம் 250 கோடிகளை அள்ளி தந்து கொண்டுள்ளது. நடிகர் கமல் ரசிகர்களுக்கும் நடிகர் சூரியா ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை கமல் தந்துள்ளார். விக்ரம் படத்தில் நடிகர் சூரியா (ரோலக்ஸ்) கதாபாத்திரத்தில் 3 நிமிடம் மட்டுமே வந்து ரசிகர்கள் மனதை அள்ளி சென்றுள்ளார். அதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. சூரியா கமல் படத்தில் நடிப்பதை கனவாக கூறியுள்ளார்.

சூரியாவிற்கு நன்றி தெரிவிக்கும் படலத்திற்க்காக அடுத்து நாங்கள் இணையும் படத்தில் என்னுடன் இணைந்து படம் முழுவதுமாய் நடிப்பார் என கமல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here