நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் பாரளுமன்றத்தில் படப்பிடிப்பு நடைப்பெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழக முன்னனி நடிகர்களில் ஓருவரான நடிகர் கார்த்திக்கின் சர்தார் திரைப்படம் அசர்பைசான் நாட்டில் உள்ள பாரளுமன்றத்தில் ஓரு சண்டை காட்சி நடைபெற்றதாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. இச்சண்டை காட்சிக்காக அந்நாட்டு அரசிடம் அனுமதி பெற்று பல கோடிகள் செலவில் படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது எனவும் நடிகர் கார்த்திக் நடித்ததிலேயே அதிக செலவு செய்து எடுக்கும் முதல் படமாகவும் காணப்படுகிறது.

அசர்பைசான் பாராளுமன்றம் மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் தாயரிப்பு நிறுவனம் 4 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் மீதமுள்ள காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்க திட்டமிட்டடுள்ளதாகவும் படக்குழு கூறியுள்ளது.
கார்த்தியின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இரும்புத் திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் படத்தை இயக்குகிறார். ஜூவி பிரகாஷ் இசையமைக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார்.ரஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
கார்த்திக் இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். வயதான தோற்றத்திலும், காவல்துறை அதிகாரியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்ட் 31 ல் வெளியாகிறது. அதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30 ல் வெளியாகிறது.