தளபதி விஜய்: பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனும், 80 மற்றும் 90 களில் பிரபல முன்னணி நடிகருமான நடிகர் கார்த்திக் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ளார். எப்போதாவது ஒரு சில படங்களில் நடிக்கிறார். தனுஷுடன் அனேகன், சூர்யாவுடன் தானா சேரந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவரது மகன் கவுதம் கார்த்திக் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது கார்த்திக்குக்கு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வந்துள்ள நிலையில் அவர் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார். தற்போது விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பூஜை சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கிடம் லோகேஷ் கனகராஜ் பேசினார். ஆனால் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பெரிய படமான இந்த படத்தில் நடிக்க கார்த்திக் மறுத்தது தொடர்பாக இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. இது பற்றி விசாரித்த போது கார்த்திக்கிற்கு மூட்டு வலி அதிகமாக இருப்பதாகவும், சில மாதங்கள் அவர் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிய வந்தது. இந்த காரணத்தினால்தான் அவர் விஜய் படத்தில் நடிகக் மறுத்துள்ளாராம்.