நடிகர் கார்த்தியின் 25 வது படம் ஜப்பான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ முருகன் இயக்குகின்றார். இந்த படத்தின் பூஜை இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
கார்த்திக் தொடர்ந்து ஹூட்டான படங்களில் நடித்து பெயர் பெற்று வருகின்றார். இந்த வருடத்தில் இவர் நடித்த விருமன் திரைப்படம் நல்ல வெற்றியை தந்தது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்தை அடிப்படையாக கொண்ட குடும்ப படமாக இருந்தது. இயக்குனர் முத்தையா இப்படத்தை உருவாக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 1ம் பாகத்தில் வந்திய தேவனாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹூட்டாகி நல்ல வரவேற்பையும் பெற்று வசூலிலும் சாதனை புரிந்து வருகின்றது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டம் இதனை மணிரத்னம் இயக்கியிருந்தார். இப்படம் 500 கோடி வசூலை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படத்தின் மெகா ஹூட்டுக்குப் பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார் இப்படமும் நல்ல வெற்றியை தந்துள்ளது. தீபாவளி ரீலிசாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலில் வாரி குவித்துள்ளது.
இந்நிலையில், தனது 25வது படத்தின் பூஜை பணிகள் இன்று நிறைவு பெற்றுள்ளது. குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜ முருகன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜப்பான் என்று பெயிரிடப்பட்டுள்ள படத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டீரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். துப்பரிவாளன் படத்தில் கதாநாயகியாக நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.
#Japan pooja pictures 🙂 pic.twitter.com/5myrVQUJjU
— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 8, 2022
தற்போது, நடிகர் கார்த்திக் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கைதி 2 பாகத்தில் நடித்து வருகின்றார்.