Home சினிமா தீபாவளிக்கு ரிலீசாகும் ‘சர்தார்’ படம் குறித்து நடிகர் கார்த்தி பேட்டி

தீபாவளிக்கு ரிலீசாகும் ‘சர்தார்’ படம் குறித்து நடிகர் கார்த்தி பேட்டி

0
2

சர்தார்: பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெளிவரும் கார்த்தியின் படம் ‘சர்தார்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராசி கன்னா, சன்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை லைலா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

இப்படம் குறித்து கார்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் முதல் கமல்ஹாசனின் விக்ரம் வரை ஏராளமான உளவாளிகள் பற்றிய படம் வெளிவந்திருக்கிறது. அந்த வரிசையில் இதுவும் ஒரு உளவாளி பற்றிய கதைதான். ஆனால் உள்ளூர் உளவாளி பற்றியது. சமூக அக்கறை கொண்ட அந்த உளவாளி ஒரு முக்கியமான உளவு வேலைக்கு உலகம் முழுவதும் பயணிக்கிற மாதிரியான கதை. அதனால் முந்தைய உளவாளிகள் படத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டு நிற்கும். இதில் நான் 10க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்திருந்தாலும், இதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்தான்’ என்று கூறியிருக்கிறார்.

karthi's sardar

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா என்று கேட்கிறார்கள். படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்த நான் தயார். ஆனால் யார் தருவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் ஒழுங்காக வந்தாலே போதும். என்னை பொறுத்தவரை சம்பளத்தை பற்றி பெரிதாக கருதுவதில்லை. மக்களை மகிழ்விக்க நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here